Thursday 17 May 2018

PLI போனஸ் குழுக் கூட்டமும்...! முடிவும்...!


PLI போனஸ் குழுவின் கூட்டம் 16-05-2018 அன்று டெல்லி.,
கார்ப்பரேட் அலுவலகத்தில்., பொது மேலாளர்
(Restg) திரு. அஷுதோஷ் குப்தா அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில்., நிர்வாக தரப்பில்., பொது மேலாளர் (SR)., பொது
மேலாளர் (Per)., முதுநிலை பொது மேலாளர் (EF) மற்றும்
முதுநிலை பொது மேலாளர் (Estt).,
&
ஊழியர் தரப்பில்., NFTE சங்கத்தின் சார்பாக......!
பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங் மற்றும் சம்மேளனச்
செயலர் தோழர். K.S.குல்கர்னி BSNL ஊழியர் சங்கத்தின்......!
சார்பாக......! பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யூ...!
அகில இந்திய தலைவர்...! தோழர். பல்பீர் சிங்
மற்றும்...! துணைப் பொதுச் செயலர்......!
தோழர்..........! சுவபன் சக்கரவர்த்தி
ஆகியோர் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில்...! 2015., 2016., 2017 மற்றும் 2018-ஆம்
ஆண்டின்...! 3-வது காலாண்டு வரையிலான ஊழியர்களின்
எண்ணிக்கை., இணைப்புகளின் எண்ணிக்கை மற்றும்
வருவாய் தொடர்பான விவரங்களை......!
நிர்வாகம் முன் வைத்தது.

இந்த விவரத்தின் படி...! 31-03-2015 அன்று 2,25,512-ஆக இருந்த
ஊழியர்களின் எண்ணிக்கை., 01-02-2018 அன்று...!
1,83,963-ஆக குறைந்துள்ளது.

2017-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது., 2018-ஆம் ஆண்டில்...!
7.2% சதவீதம் மொபைல் இணைப்புகளும்., 42.3% சதவீதம் FTTH BB
இணைப்புகளும்., 20.9% சதவீதம் Leased Line இணைப்புகளும்...!
அதிகரித்துள்ளது...............! அதே நேரத்தில்., தரைவழி...!
இணைப்புகள் (LL) 10% சதவீதமும்., WLL...............!
இணைப்புகள் 19.7% சதவீதமும்., ADSL BB...!
இணைப்புகள் 7.1% சதவீதமும்...!
குறைந்துள்ளது...!

2016-2017 ஆம் ஆண்டில் 31,533/- கோடி ரூபாயாக இருந்த...!
மொத்த வருமானம்., 2017-2018 ஆம் ஆண்டின்., மூன்றாவது......!
காலாண்டு வரை 16,268/- கோடி ரூபாயாக......!
குறைந்துள்ளது......!

எனவே...! BSNL நிறுவனத்தின் வருமானம்...! மிகக்...!
கடுமையாக., குறைந்துள்ள நிலையில்...! ஒரு அடையாளத்...!
தொகையை மட்டுமே PLI போனஸ்-ஆக வழங்க...!
முடியும்...! என...! நிர்வாகத் தரப்பில்...!
கூறப்பட்டது......!

ஆனால்...! ஊழியர் தரப்பு...! நிர்வாகத்தின்...!
இந்த முன்மொழிவை...! ஏற்கவில்லை...! நிராகரித்தது......!
மேலும்...! 2015-2016 ஆம் ஆண்டிற்கான PLI போனஸ்...!
குறித்து...! விரிவாக...! விவாதித்தது...!

கடந்த...! 2014-2015 ஆம் ஆண்டு வழங்கியதை விட...! PLI போனஸ்...!
கூடுதலாக...! வழங்க வேண்டும்...! என்றும்...! நிர்வாகம் தந்த...!
இந்த தகவல் குறிப்பில்...! கூடுதல் சேவை வருவாய்
பற்றி...! எந்தவித...! குறிப்பும்...! இல்லை...!
என்றும்......! நிராகரித்தது......!

எனவே...!
இது தொடர்பாக...!
PLI போனஸ் குழுவின்...!
அடுத்த கூட்டத்தில்...! விவாதித்து...!
முடிவு...! எடுப்போம்...! என்று...!
முடிவில்லா கூட்டமாக...!
PLI போனஸ் குழுக் கூட்டம் முடிவுற்றது...!

No comments:

Post a Comment