Tuesday 20 February 2018

ஊதிய மாற்றமும்...! PMO அலுவலக விளக்கமும்...!


மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும்
அதிகாரிகள் மற்றும்  ஊழியர்களுக்கு., ஊதியக்குழு அமைத்திட
வெளியான., DPE வழிகாட்டுதல்படி., 01-01-2017 முதல் அமுல்படுத்த
வேண்டிய., 3-வது ஊதிய மாற்றம்., நமது BSNL அதிகாரிகள்
மற்றும் ஊழியர்களுக்கு சாத்தியமில்லை என்பதை
நன்கு உணர்ந்த., நமது NFTE சங்கம்
&
இலாபம் இல்லை என்றால் ஊதிய மாற்றம் இல்லை -என்ற.,
DPE-யின் வழிகாட்டும் நிபந்தனையான., Affordability பிரிவில்......!
இருந்து...! BSNL நிறுவனத்திற்கு விலக்கு அளித்திட வேண்டும் என்று.,
22-12-2017 அன்று நமது பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர
மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தது.

அதற்கான பதில் கடிதம்., DPE இலாக்காவிடமிருந்து., நமது NFTE.,
பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்., அவர்களுக்கு.,
31-01-2018 அன்று., அனுப்பப்பட்டுள்ளது.

இக் கடிதத்தின் படி., மத்திய பொதுத்துறை
ஊழியர்களுக்கான., 8-வது ஊதிய மாற்றம் தொடர்பாக.,
24-11-2017 அன்று., DPE தனது வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது
என்றும்...! அதில்., குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் ஏதாவது.,
விலக்குப்பெற வேண்டும் எனில்...! மத்திய அமைச்சரவையின்
ஒப்புதல் பெற வேண்டும் எனவும்., அதற்காக., தாங்கள்...!
தொலைத்தொடர்பு துறை (DOT)-ஐ அணுக வேண்டும்
எனவும்., வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.

ஆகவே., நாம்...!
தொலைத்தொடர்பு துறை (DOT) மூலமாக...!
DPE-யின் Affordability பிரிவில் இருந்து...!
BSNL நிறுவனத்திற்கு விலக்கு பெறுவதற்கான.,
பரிந்துரையை பெற்று...!
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே...!
ஊதிய மாற்றம் நடைமுறைக்கு வரும்...!
அதுவரை...! நமது போராட்டம்...! தொடரும்...!

No comments:

Post a Comment