Friday 9 February 2018

AUAB கூட்டமைப்பின்...! கூட்டமும்...!
விதிப்படி வேலை - ஒத்துழையாமை இயக்கமும்...!


நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்
மாண்புமிகு திரு. மனோஜ் சின்ஹா அவர்களை., சந்தித்து.,
நமது கோரிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக., நேரம் ஒதுக்க
வேண்டும் என., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின்......!
(AUAB) சார்பில்..........!
&
10-01-2018 அன்று கடிதம் கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில்., 06-02-2018 அன்று மாலை 5-00 மணிக்கு.,
அமைச்சரை சந்திப்பதற்காக., ஏற்கனவே..........! நிர்ணயிக்கப்பட்டு.,
இருந்த., கூட்டம்., நாடாளுமன்ற பணிகள் காரணமாக.,
நடைபெறவில்லை.........................!

இந் நிலையில்., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (AUAB) கூட்டம் 06-02-2018
அன்று புது டெல்லியில்., நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு., AIBSNLEA., சங்கத்தின் அகில இந்திய
பொதுச் செயலர் தோழர். பிரகலாத் ராய்.,
தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில்., NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO, BTEU,
SEWA - BSNL, TEPU, AIGETOA, BSNLMS, BSNLOA, ATM மற்றும் TOA BSNL
ஆகிய சங்கங்களின் பொதுச் செயலர்கள் மற்றும்
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில்...! 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற...!
சத்தியாகிரகப் போராட்டம் மதிப்பாய்வு., செய்யப்பட்டது......!
மேலும்...................................! போராட்ட இயக்கங்களை தீவிரப்படுத்த...!
அனைத்து சங்க பிரதிநிதிகளின் தீவிர ஆலோசனை..........!
மற்றும் விவாதத்திற்கு பிறகு கீழ்க்கண்ட......!
முடுவுகள்...! எடுக்கப்பட்டது...!

AUAB கூட்டமைப்பின் கூட்ட முடிவுகள் :
  • நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மாண்புமிகு திரு. மனோஜ் சின்ஹா அவர்களை., சந்திப்பதற்கான., முயற்சியை., தொடர்ந்து., மேற்கொள்வது.
  • விதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை 30-01-2018 முதல் தொடர்ந்து நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்க காலங்களில்.,(விதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்கம் முடிவு பெறும் வரை) ஒவ்வொரு புதன் கிழமைகளிலும்., கோரிக்கைகளை விளக்கி., தலமட்டங்களில்., ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • நமது விதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தின் அடிப்படையில்., மத்திய அரசு., அறிவித்துள்ள NOFN உள்ளிட்ட திட்டங்களுக்கு., நமது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்.,  நிர்வாகத்தின்., சாலை ஓர நிகழ்ச்சிகள் (Road Show) மற்றும் விற்பனை மேளாக்களில் (Sim Sales Melas)., விற்பனைப் பகுதி (Sales Section) ஊழியர்களை தவிர., மற்ற பகுதி ஊழியர்கள்., யாரும் பணிபுரிய வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.                 
  • 23-02-2018 அன்று காலை 11-30 மணிக்கு., நமது BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் (BSNL Corporate Office) இருந்து துவங்கி., டெல்லி சஞ்சார் பவன் (DOT அலுவலகம்) நோக்கி நடைபெறும் பெருந்திரள் பேரணியில்., பெருந்திரளான., தோழர்களை திரட்டிட., முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இம் முடிவுகள் அடங்கிய கடிதத்தை., தொலைத்தொடர்பு துறை (DOT) செயலர் திருமதி. அருணா சுந்தரராஜன் அவர்களுக்கும் மற்றும் நமது CMD திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவா அவர்களுக்கும் அனுப்பிட., முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே...! தோழர்களே...!
நமது...! AUAB கூட்டமைப்பின் முடிவுகளை...! அமுல்படுத்துவோம்
...!
நமது...! 
போராட்ட இயக்கங்களை..! துச்சமென நினைக்கும்...!
தொழிலாளர்களுக்கு...! எதிரான...! அரசை.........................! 
வலுவான இயக்கங்கள் மூலம்........................................!
நம் கோரிக்கைகளை...! ஏற்கச் செய்வோம்...!
திரள்வீர்..........! தோழர்களே..........!

No comments:

Post a Comment