Saturday 14 October 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கான...!
போனஸ்..........! பேச்சு வார்த்தையும்...!
போனஸ் பட்டுவாடாவும்...!


நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்.,
பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு., போனஸ் விதிப்படி.,
8.33 என்ற அடிப்படையில் ஒரு மாத சம்பளம் அல்லது
குறைந்த பட்சம் ரூ. 7000/- போனஸ்..........!
வழங்கிட., வலியுறுத்தி...!
&
கடந்த ஒரு மாத காலமாக., நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்-உடன்.,
பல சுற்று..........! பேச்சு வார்த்தை நடத்தியும்., செப்டம்பர்-26 கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் மற்றும் அக்டோபர்-04 தர்ணா போராட்டம் ஆகிய
இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்தியும்., போனஸ்
குறித்து எந்தவித முன்னேற்றமும்...!
இல்லாத நிலையில்...!

இந்த அவல நிலையை கண்டித்து., NFTE மற்றும்
TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பாக., 12-10-2017 அன்று
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் 16-10-2017 அன்று தர்ணா..........!
போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட போராட்டத் திட்டங்களுடன்.,
11-10-2017 அன்று மாவட்ட நிர்வாகத்திற்கு...............!
போராட்டக் கடிதம் கொடுக்கப் பட்டது.

இந்த., போராட்ட அறைகூவல் மற்றும் போராட்டத்தை.,
தொடர்ந்து...! போனஸ் பிரச்சனையை மையப்படுத்தி..........!
12-10-2017 மற்றும் 13-10-2017 ஆகிய தேதிகளில்..........!
முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில்.,
பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தையில்., நிர்வாகத் தரப்பில்...!
முதன்மை பொது மேலாளர் திரு. S.சபீஷ், ITS., துணைப்
பொது மேலாளர் (நிர்வாகம்) திரு. K.பொன்னுசாமி, துணைப்
பொது மேலாளர் (CFA) திரு. K.அண்ணாதுரை மற்றும்
உதவி பொது மேலாளர் (நிர்வாகம்)
திரு. C.கந்தசாமி  மற்றும்
&
நமது NFTE மற்றும் TMTCLU சங்கங்களின் சார்பில்.,
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், மாநில உதவிச்
செயலர் தோழர். G.வெங்கட்ராமன் மாவட்ட பொருளர் தோழர்.
S.காமராஜ் மற்றும் TMTCLU மாநில உதவிச் செயலர்
தோழர். A.சண்முக சுந்தரம் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

இப் பேச்சுவார்த்தையில்., விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் முடிவுகள்:
  • நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2017-ஆம் ஆண்டிற்கான போனஸ் 8.33 (அ) ரூ.7000/- இதுவரை (13-10-2017 மதியம் 03-30 வரை) பட்டுவாடா செய்யப்படவில்லை., எனவே இன்னும் ஓரிரு நாட்களுக்குள் (தீப ஒளித் திரு நாளுக்கு முன்பாக) பட்டுவாடா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். நமது கோரிக்கையின் நியாயம் உணர்ந்த முதன்மை பொது மேலாளர்., ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பட்டுவாடா நிதி 68 லட்சத்தை (கேபிள் பணி முகவருக்கான நிலுவை 44 லட்சத்தில் 35 லட்சம், House Keeping முகவருக்கான நிலுவை 28 லட்சத்தில் 24 லட்சம் மற்றும் Security Guard முகவருக்கான நிலுவை 11 லட்சத்தில் 9 லட்சம் மொத்தம் 68 லட்சம்) உரிய ஒப்பந்ததாரரிடம் வழங்கி விட்டதாகவும், ஸ்ரீ வாரி ஒப்பந்ததாரர் வசம் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 13-10-2017 இன்று போனஸ் தொகை  வங்கிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், மற்ற ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பட்டுவாடா செய்திட உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
  • ஒப்பந்த ஊழியர்களுக்கான., மாநில நிர்வாகத்தின் 29-09-2016, 25-10-2016 மற்றும் 04-10-2017 ஆகிய தேதியிட்ட உத்திரவுகளின் அமுலாக்கம் குறித்து வலியுறுத்தினோம். நமது கோரிக்கை ஏற்கப்பட்டு., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும்...! இவ் இவ்வுத்திரவுகளின் அடிப்படையில்., நமது சேலம் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின்., நோடல் அதிகாரியாக., 
    துணைப் 
    பொது மேலாளர் (CFA) திரு. K.அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்தார். 
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு., பணித்தன்மையின் அடிப்படையில் மறுவகைப்படுத்தப்பட்டு (Re-Categorization)., திறனுக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்ற மாநில நிர்வாகத்தின் 24-07-2017 தேதியிட்ட உத்திரவை அமுல்படுத்திட வலியுறுத்தி., அதற்கான ஆவணங்களை வழங்கினோம்.  நமது கோரிக்கை ஏற்கப்பட்டு..., உரிய வழிகாட்டுதல் பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

நிர்வாகத்தின் உத்திரவாதப்படி.,
ஸ்ரீ வாரி ஒப்பந்ததாரர் வசம் பணி புரியும்...!
சேலம் நகர ஒப்பந்த ஊழியர்களுக்கு......! (25 தோழர்களுக்கு).,
அக்டோபர் 2016 முதல் ஜூலை 2017 வரை 10 மாதங்களுக்கு
8.33 அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ. 5176/- முதல்
அதிகபட்சம்  ரூ. 5624/- வரை போனஸ்
பட்டுவாடாவும்.,
&
சேலம் ஊரக ஒப்பந்த ஊழியர்களுக்கு (45 தோழர்களுக்கு).,
ஜனவரி 2017 முதல் செப்டம்பர் 2017 வரை 9 மாதங்களுக்கு 
8.33
அடிப்படையில் 
குறைந்தபட்சம் ரூ. 4854/- முதல்..........!
அதிகபட்சம் 
 ரூ. 5274/- வரை போனஸ்..........!
பட்டுவாடாவும்., செய்யப்பட்டுள்ளது.

சுமூகமாக..........! பேச்சுவார்த்தை நடத்தி...!
போனஸ் பட்டுவாடா-விற்கான., 
துவக்கத்தை செய்திட்ட...!
மாவட்ட நிர்வாகத்திற்கு...! 
நமது...! நன்றி...!
பாராட்டுக்கள்...............!

மற்ற...! ஒப்பந்த ஊழியர்களுக்கு...!
போனஸ் பெறும் வரை...! குறைந்த பட்ச போனஸ் ரூ. 7000/-
பெறும் வரை...! நமது போராட்டம்...! தொடரும்...!

No comments:

Post a Comment