Friday 13 October 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு...!
நியாயமான போனஸ் வழங்கிடக் கோரி...!
NFTE & TMTCLU சார்பில் நடைபெற்ற...!
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!
















நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்.,
பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு., போனஸ் விதிப்படி.,
8.33 என்ற அடிப்படையில் ஒரு மாத சம்பளம் அல்லது
குறைந்த பட்சம் ரூ. 7000/- போனஸ்..........!
வழங்கிட., வலியுறுத்தி...!

NFTE & TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பாக.,
12-10-2017 வியாழக்கிழமை அன்று மதியம் 12-30 மணிக்கு.,
சேலம்., முதன்மை பொது மேலாளர் அலுவலகம்...!
முன்பாக...! மாபெரும்...! கவன ஈர்ப்பு...!
ஆர்ப்பாட்டம்...! நடைபெற்றது...!

இக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு., NFTE மாவட்ட
உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன் மற்றும் TMTCLU
மாவட்ட தலைவர் தோழர். N.சிவமோகன் ஆகியோர்
கூட்டுத் தலைமை தாங்கினர்.

TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர். A.சண்முக சுந்தரம்.,
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து.,
துவக்க உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்திற்கான., கோரிக்கை..., முழக்கத்தை.,
NFTE மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர்.
S.கண்ணையன் எழுப்பினார்.

கோரிக்கைகளை விளக்கி., NFTE மாவட்ட செயலர் தோழர்.
C.பாலகுமார், TMTCLU மாவட்ட செயலர் தோழர். M.இசையரசன்,
மற்றும்...! TMTCLU நாமக்கல் கிளை செயலர் தோழர்.
K.சரவணன் ஆகியோர்......! கண்டன...!
சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக., TMTCLU மாவட்ட பொருளர் தோழர். G.செல்வராஜ்.,
நன்றி கூறி., ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்., 150-க்கும் மேற்பட்ட.,
தோழர்., தோழியர்கள் திரளாக......! கலந்து...!
கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment