Monday 14 August 2017

வான் மழை...! கண்டு...! அஞ்சிட...!
வாழ்த்து மழையோ...! வான் மழையை மிஞ்சிட...!
&
சென்னை சிவந்திட...! 
சிறப்போடு...! நடைபெற்ற..........!
தோழர். ஆர். கே., பணி ஊக்கப் பாராட்டு விழா...!











ஐம்பத்தைந்து ஆண்டுகள் சங்க - சமூகப் பணி.,
எழுபத்தைந்து அகவை நிறைவு...! என்கின்ற அடிப்படையில்.,
தோழர். ஆர்.கே., அவர்களை., பாராட்டியும்., அவர் தம் பணி மேலும்
சிறக்க., ஊக்குவிக்கும் வகையில்...! மாநில விழாக்குழுவின்...!
சார்பாக...! பணி ஊக்கப் பாராட்டு விழா...!
&
05-08-2017 சனிக்கிழமை அன்று., சென்னை.,
தர்மபிரகாஷ் மண்டபத்தில்., வான் மழை கண்டு அஞ்சிட...!
வாழ்த்து மழையோ...! வான் மழையை மிஞ்சிட...!
சென்னை சிவந்திட...! மிகச் சிறப்பாக.,
நடைபெற்றது......!

திட்டமிட்ட., நிகழ்வுப்படி... மாலை 03-30 மணிக்கு.,
துவங்கிய......, தோழர். ஆர்.கே., பணி ஊக்கப் பாராட்டு...!
விழாவிற்கு...! விழாக்குழுவின் கன்வீனர் தோழர்.
R.ஜெயபால் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R.பட்டாபிராமன்.,
மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர். S.தமிழ்மணி.,
ஆகியோர் முன்னிலை வகிக்க., மாநிலத் தலைவர்
தோழர். S.காமராஜ் வாழ்த்துரையோடு.,
வரவேற்புரை ஆற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்., மாநிலச் செயலாளர்
தோழர். R.முத்தரசன், AITUC-யின் மாநில பொதுச் செயலாளர்
தோழர். T.M.மூர்த்தி, நமது NFTE - BSNL யின் பொதுச் செயலர் தோழர்.
C.சந்தேஷ்வர் சிங், BSNLEU-வின் பொதுச் செயலர் தோழர்.
P.அபிமன்யு, TEPU-வின் பொதுச் செயலர்
தோழர்.  V.சுப்புராமன்,
&
FNTO-வின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். K.வள்ளிநாயகம்,
SEWA - BSNL-ன் அகில இந்திய தலைவர் தோழர். P.N.பெருமாள்,
NFTE - BSNL-யின் மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர்.
R.K.கோஹ்லி, NFTE-யின் சென்னைத்தொலைபேசி
மாநிலச் செயலர் தோழர். C.K.மதிவாணன்
&
மற்றும் FNTO-வின் துணைப் பொதுச் செயலர்
தோழர். S.லிங்கமூர்த்தி ஆகியோர்
பாராட்டுரை வழங்கினர்.

மேலும்...! தோழர். ஆர்.கே., அவர்களின்.,
குமாரன்., திரு. K.அஜய் அவர்கள்., அமர் சேவா சங்கம்.,
பற்றி..........! அறிமுக உரை ஆற்ற...! அமர் சேவா சங்கத்தின்.,
நிறுவனர் மற்றும் தலைவர் திரு. S.ராமகிருஷ்ணன்.,
பாராட்டுரை வழங்கினார்.

NFTE - BSNL-யின் முன்னாள் மாநிலச் செயலர்.,
தோழர். R.பட்டாபிராமன், NFTE - BSNL-யின் முன்னாள்
மாநிலத் தலைவர் தோழர். S.தமிழ்மணி, NFTE - BSNL-யின்
மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன்.,
&
AIBSNLPWA-வின் பொதுச் செயலர் தோழர். G.நடராஜன்,
BSNLEU-வின் மாநில செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன்,
AIBSNLEA-வின் மாநில செயலர் தோழர். C.துரையரசன்,
TEPU-வின் சென்னைத்தொலைபேசி மாநிலச்
செயலர் தோழர். J.விஜயகுமார்.,
&
AIBSNLPWA-வின் அகில இந்திய துணைத் தலைவர்
தோழர். D.கோபாலகிருஷ்ணன், NFTE-யின் மூத்த தொழிற்சங்க
தலைவர் தோழர். K.சேது., NFTE-யின்..., மூத்த தொழிற்சங்க
தலைவர் தோழியர். A.T.ருக்மணி மற்றும் TMTCLU-வின்
மாநில பொதுச் செயலர் தோழர். R.செல்வம்.,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பாராட்டுரையின்., நிறைவாக...! இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின்..., தேசியக்குழு உறுப்பினர்
தோழர். தா.பாண்டியன்., பாராட்டுரையோடு.,
அரசியல்., பேரூரை... ஆற்றினார்.

பணி ஊக்கப் பாராட்டு விழாவின்.,
ஒரு பகுதியாக., கடலூர் மாவட்ட சங்க வெளியீடான.,
தோழர். சிரில் அறக்கட்டளை 18-ஆம் ஆண்டு தமிழ் விழாவில்
தோழர். தா.பாண்டியன் ஆற்றிய இலக்கியப்
பேரூரையின் தொகுப்பான.,
"வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி"
என்ற கையேட்டையும்.,
&
டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 125-வது பிறந்தநாள் விழாவில்
"ஒருங்கிணைந்த சமூக கட்டமைப்புக்கு அம்பேத்கரின் வழிகாட்டல்"
"சமவேலைக்கு சம ஊதியம்" மற்றும் "பொதுத்துறை ஊதிய
மாற்றத்தில் அபாயம்" என்ற தலைப்புகளில்...!
தோழர். பட்டாபி ஆற்றிய உரை மற்றும்
கட்டுரையின் தொகுப்பான.,
&
"நவ புத்தா"
என்ற கையேட்டையும்.,
தோழர். தா.பாண்டியன் வெளியிட.,
தோழர். ஆர்.கே., பெற்றுக் கொண்டார்...!

நிறைவாக...! விழாவின் நாயகன்...!
"ஈரெழுத்து இமயம்" தோழர். ஆர்.கே., உணர்ச்சி மிக்க......!
ஏற்புரையோடு., எனது...! சங்க மற்றும் சமூகப் பணி.,
உங்களோடு...! தொடரும்...! என்ற...............!
உறுதி மொழியோடு...! ஏற்புரை...!
வழங்கினார்...!

இறுதியாக...! மாவட்ட சங்கங்கள்...!
தங்களின்...! அன்பான...! நினைவுப் பரிசுகளை...!
வழங்கிட...! மாநில உதவிச் செயலர் தோழர். G.S,முரளிதரன்.,
நன்றி கூற... இரவு 08-00 மணிக்கு... பணி ஊக்கப்...!
பாராட்டு விழா...! இனிதே...! முடிவுற்றது...!

நமது சேலம் மாவட்டத்தில் இருந்து...!
தொழிற்சங்க ஆசான் தோழர். M.சுப்ரமணியன்.,
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், மாநில உதவிச்
செயலர் தோழர். G.வெங்கட்ராமன்., மாநில சிறப்பு
அழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன்
&
மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி,
மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், மாவட்ட உதவிச்
செயலர் தோழர். K.தேவராஜன், மாவட்ட அமைப்பு செயலர்
தோழர். S.R.செல்வராஜ் உள்ளிட்ட...! 70-க்கும்..........!
மேற்பட்ட., தோழர்கள்... கலந்து கொண்டு.,
சிறப்பித்தனர்...............!

No comments:

Post a Comment