Wednesday 19 April 2017

GPF-க்கான...! புதிய செயல்முறை...!

Image result for gpf new rules images

BSNL ஊழியர்களுக்கு இனிமேல் GPF (பொது வைப்பு நிதி).,
நேரடியாக தொலைத்தொடர்பு துறை (DOT) CCA மூலமாக தான்...,
(முன்பணம் (Advance) மற்றும் திரும்பபெறுதல் (Withdrawal).,)
பட்டுவாடா செய்யப்படும் என..., கார்ப்பரேட்
அலுவலகம் 18-04-2017 அன்று..........!
உத்திரவிட்டுள்ளது.

இந்த உத்திரவின் படி...:
  • ஊழியர்கள் தங்களுடைய GPF முன்பணம் (Advance) மற்றும் திரும்பபெறுதல் (Withdrawal) தேவைக்கு ERP / ESS எனப்படும் Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கப்பட்ட GPF படிவங்களை சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி ஒப்புதல் செய்து நேரடியாக தொலைத்தொடர்பு துறை CCA அலுவலகத்துக்கு இமெயில் (e-mail) மூலம் அனுப்ப வேண்டும்.
  • தொலைத்தொடர்பு துறை., CCA அலுவலகம் நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் GPF தொகையை வரவு வைத்து விடும்.
  • இந்தப் பணிகள் இரண்டு கட்டமாக அமுல் படுத்தப்படும்.
  • முதற்கட்ட 12 மாநில பணிகளில் முதல் பணியாக மேற்கு வங்காள CCA அலுவலகத்தில் 20-04-2017 அன்று GPF-ற்கான புதிய செயல்முறை பணிகள் துவங்கும். இப்பணியில் அஸ்ஸாம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் பங்கு பெறும். மேலும்...! வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் இப்பணிகள் துவங்கப்படும்.         
  • தமிழகம் உள்ளிட்ட எஞ்சியுள்ள மாநிலங்கள் இரண்டாவது கட்ட பணிகளில் உள்ளது. இரண்டாவது கட்ட பணிகளின் துவக்கம் என்பது இந்த கால (முதற் கட்ட பணிகளின் கால.,)  கட்டத்திற்குள் திட்டமிடப்படும்.  
  • அந்தந்த மாநிலங்கள் அந்தந்த பகுதி CCA அலுவலகங்களுடன் இணைந்து GPF-ற்கான புதிய செயல்முறை திட்ட பணிகளை PAN India முறையில் அமுல் படுத்திட வேண்டும்.
  • GPF., தொலைத்தொடர்பு துறை CCA மூலமாக பட்டுவாடா செய்வதன் மூலமாக... இனி... ஊழியர்கள் விரைவாக GPF தொகையை பெற முடியும்.
  • ஆனால்...! தற்போதுள்ள நடைமுறைப்படி மாதாமாதம் விண்ணப்பிக்க முடியுமா...! என்பது கேள்விக் குறியாக உள்ளது.

No comments:

Post a Comment