Thursday 23 March 2017

மார்ச் 23 - மாவீரன் பகத்சிங் - நினைவு நாள்


மாவீரன் பகத்சிங் (28.09.1907 - 23.03.1931)

சுதந்திரம் என்கிற விருட்சத்திற்கு ஆணிவேராக...
இருந்தவர்களை... யாரும் எளிதில் மறந்து விட முடியாது. அப்படி...
நாட்டுக்காக... உழைத்த சில நல்ல... தியாகத் தலைவர்களை...
பிறந்தநாள் அல்லது நினைவு நாள் மட்டும் இல்லாமல்,
மற்ற நாளிலும் அவர்களின் தியாகத்தை...
நெஞ்சில் சுமப்பது அவசியம்.

அந்த வகையில்...

இந்திய இளைஞன் ஒவ்வொருவனுக்கும்...!
உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தவன்...!

நாட்டுப் பற்றாளன்...! கடமை வீரன்...!
அஞ்சா நெஞ்சன்...! கொள்கைத் தெளிவு கொண்டவன்...!

வயதால் இளைஞன்...! அறிவால் சிந்தனையாளன்...!
மனித குலம் முழுமையையும் நேசித்தவன்...!
மனிதனை மடமைச் சேற்றில் ஆழ்த்தும் 
மூடநம்பிக்கை எதிர்ப்பாளன்...!

நாத்திகன்...! 
சுயமரியாதை வீரன்...!

இப்படியும்...! 
ஒரு இளைஞன் நம்மிடையே வாழ்ந்தானா...!
என்று... ஆச்சரியப்பட வைக்கிறது...!
மாவீரன் பகத்சிங் வரலாறு...!

ஒரு பெரிய ராணுவப்படை செய்ய வேண்டிய பணியை...!
தனியொரு மனிதனாக செய்து காட்டிய மாவீரன்...!

1907-ல் பிறந்து...!
1931-ல் வெள்ளையராட்சியால் தூக்கிலிடப்பட்ட...!
பகத்சிங் வாழ்ந்தது 24 ஆண்டுகளே...!
ஆனால்...!
அதற்குள் அவன் எட்டிப் பிடித்த 
வெற்றிகள் ஏராளம்...!

மாவீரன் பகத்சிங்...!
இறந்து...! 86 ஆண்டுகள்...! கடந்த பின்பும்...!
இன்னமும்...! அவன் பெயர் ஒவ்வொரு உதடுகளாலும்...!
உச்சரிக்கப் படுவதற்கு காரணம்...!
அவன் தியாகமும்...! வீரமும்...!
எனவே...! 
அவன் தியாகத்தை...!
என்றென்றும்...! நெஞ்சில் சுமப்போம்...!

வாழ்க...! பகத்சிங்...! புகழ்...!

இளைஞர்களுக்கான செய்தி:

மாவீரன் பகத்சிங்... தனது இளைய சகோதரன் குல்தார்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் உள்ள வாசகங்கள்:

உன் கண்ணீரினைத் துடைத்துக்கொள்... நாளைக் காலை மெழுகுவர்த்தியின் ஜோதி மங்குவதைப் போல நானும் விடியலின் ஒளியில் கலந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள், மின்னல் ஒளியைப் போல உலகத்தில் சுடர் விடும். 

ஒரு தூசிக்கு சமமான கைப்பிடிக்குள் அடங்குகின்ற என் உடலின் அழிவால் ஏற்படும் நஷ்டம் தான் என்ன... 

உன் மெலிந்த உடலை பேணிக் காத்துக்கொள்... உடல் வலிமையும்... உள்ள உறுதியும் கொண்ட எதிர்கால வீரனாக நீ மாற வேண்டும் என்பதே... என் ஆசை...! 

இன்று போய்... நாளை... நாங்கள்... மீண்டும்... பிறப்போம்...!
எண்ணற்ற... இந்த... தேசத்து... வீரர்கள்... வடிவில்...!

No comments:

Post a Comment