Saturday 18 February 2017

கோழிக்கோடு... மத்திய செயற்குழு...


நமது மத்திய சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம்...,
ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு
வந்த... முதல் மாநிலமான கேரள மாநிலத்தில்...,
&
கோயில்களின் கோட்டை நகரமான... கோழிக்கோடு
மாவட்டத்தில் 2017 பிப்ரவரி 13 அன்று கேரள மாநிலத்தின்
பாரம்பரிய நடன மற்றும் இசையான... கதகளி நடனத்துடனும்...
செண்டை மேள இசையுடனும்... துவங்கி... 2017...
பிப்ரவரி 13, 14 ஆகிய இரு நாட்களில்
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

செயற்குழுவின் முதல் நிகழ்ச்சியாக... தேசிய கொடியை...
அகில இந்திய தலைவர்... தோழர். இஸ்லாம் அகமது... ஏற்றி வைக்க...
நமது சங்க கொடியை... அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.
C. சந்தேஷ்வர் சிங், விண்ணதிரும் முழக்கங்களுக்கு
இடையே ஏற்றி வைத்தார்.

கேரள மாநில செயலர் தோழியர். லத்திகா தலைமையிலான...
வரவேற்புக்குழு அனைவரையும் வரவேற்று, அனைத்து...
மத்திய சங்க நிர்வாகிகள் மற்றும் மாநில...
செயலர்களை  கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து... அகில இந்திய தலைவர்... தோழர்.
இஸ்லாம் அகமது அவர்கள், மத்திய செயற்குழுவை... தலைமையேற்று
உரையாற்ற...  பொதுச் செயலர் தோழர். C. சந்தேஷ்வர் சிங்
ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி
உரையாற்றினார்.

செயற்குழுவை துவக்கி வைத்து... AITUC-யின் அகில
இந்திய செயலர்... தோழியர். அமர்ஜித் கௌர் ஆற்றிய உரை
மிகுந்த எழுச்சி மிக்க உரையாக அமைந்தது.

SEWA பொதுச் செயலர் தோழர். N.D. ராம், TEPU உதவி
பொதுச் செயலர் தோழர். J. விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள்,
அரசியல் மற்றும்  தொழிற்சங்க தலைவர்கள்
வாழ்த்துரை வழங்கினர்.

செயற்குழு விவாதத்தில்... மாநில செயலர்கள் மற்றும்
அகில இந்திய பொறுப்பாளர்கள் பங்கேற்று... பிரச்சனை மற்றும்
கோரிக்கைகளை..., போராட்ட தேவைகளை வலியுறுத்தி விவாதத்தினை
செழுமைப்படுத்தினர். தமிழகத்தின் சார்பில்... மாநில செயலர்...
தோழர். K. நடராஜன் மற்றும் சம்மேளனச் செயலர் தோழர்.
S.S. கோபாலகிருஷ்ணன் விவாதத்தில்...
பங்கேற்றனர்.

தீர்மான குழுவில்... தமிழகத்தின் சார்பில்... நமது மாநில
தலைவர் தோழர். P.காமராஜ் இடம் பெற்றார்.

நிறைவாக... பொதுச் செயலர் தோழர். C. சந்தேஷ்வர் சிங்,
விவாதங்களுக்கு பதில் அளிக்க... தீர்மானங்கள் நிறைவேற்றப்பட...
மத்திய செயற்குழு இனிதே முடிவுற்றது.

மத்திய செயற்குழுவில்... தமிழகத்தின் சார்பில்...
41 சார்பாளர்கள்... பங்கேற்றனர். நமது சேலம் மாவட்ட சங்கத்தின்
சார்பில்... மாவட்ட செயலர் தோழர். C. பாலகுமார் மற்றும்
மாநில உதவி செயலர் தோழர். G. வெங்கட்ராமன்
ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

உறுப்பினர் எண்ணிக்கையில் குறைவு என்றாலும்...
சங்கப்பற்றில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல... என்பதை
நிரூபிக்கும் வகையில்... கேரள மாநில சங்கத்தின்...
உற்சாகமிகு வரவேற்போடு...
&
தோழமையான உபசரிப்பு... அறுசுவை சைவ & அசைவ உணவு...
அற்புதமான விருந்தோம்பல்... தெருவெங்கும் செங்கோடி தோரணம்...
என சிறப்பான ஏற்பாடுகளை செய்த... கேரளத் தோழர்களை...
எவ்வளவு பாராட்டினாலும் தகும்... சேலம்... மாவட்ட...
சங்கத்தின்... நல் வாழ்த்துக்கள்...

மத்திய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  • நிதி ஆயோக் பரிந்துரையின் படி BSNL மற்றும் ITI நிறுவனங்களை விற்கத் துடிக்கும் மத்திய அரசின் மோசமான பொதுத்துறை விரோதக் கொள்கையை எதிர்த்து அனைத்து சங்கங்களுடன் இணைந்து கடுமையாக ப் போராடுவது.
  • BSNL நிறுவனத்தின் செல் கோபுரங்களை தனியாக பிரித்து, தனி துணை நிறுவனம் அமைக்கும் முயற்சியை எதிர்த்துப் போராடுவது, மேலும்..., பாரத பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் இயக்கம் நடத்துவது. 
  • பொதுத்துறை அதிகாரிகளின் ஊதிய மாற்றத்திற்கான நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையிலான 3-வது ஊதிய மாற்றக்குழுவின் அறிக்கையை மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும். பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதியப்  பேச்சு வார்த்தைக்கான வழிகாட்டுதலை DPE உடனடியாக வெளியிட வேண்டும். BSNL நிறுவனம் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி ஊதியப் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கவேண்டும்.
  • 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் போனசை மீட்டுத்தந்த மத்திய சங்கத்திற்கு செயற்குழு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. மேலும்..., 2015 - 2016 ஆம் ஆண்டிற்கான போனசைப் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • ஓய்வூதியர்களுக்கான 78.2 IDA பிரச்சனையைத் தீர்த்து வைத்தமைக்காகவும், ஓய்வூதியப் பங்களிப்பான 60 : 40 முறையை நீக்கியமைக்காகவும் மத்திய செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
  • 78.2 சத சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி பெற்றுத்தந்த மத்திய சங்கத்தை மத்திய செயற்குழு மனதார பாராட்டுகிறது.
  • TTA மற்றும் TM பதவிகளில் 15 சத இடங்கள் சேவை அடிப்படையில் நிரப்பப்படவேண்டும்.
  • வணிகப்பகுதிகள் உருவாக்கத்தில் நிர்வாகம் சங்கங்களை கலந்து ஆலோசிக்காததை இச் செயற்குழு கண்டிக்கிறது.
  • வங்கிகளில் உள்ளது போல் 4-வது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும்.
மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
  • கவன ஈர்ப்புப் போராட்டம்: பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்காக, DPE நிறுவனம் உடனடியாக வழிகாட்டுதல் வழங்கிட கோரி 16-03-2017 அன்று மாவட்ட மற்றும் மாநில மட்டங்களில் மதிய உணவு இடைவேளையின் போது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும்.
  • தேசிய ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு உருவாக்கம்: மத்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் 7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கு பிறகு கூட்டணி சங்கங்களை உள்ளடக்கி தேசிய தொழிலாளர் கூட்டணி என்பதை உருவாக்கி செயல்பட்டு வந்தோம், அதிகாரிகளின் சங்கங்களும் இக்கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்ற அடிப்படையில், இனி இக்கூட்டமைப்பு தேசிய ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படும்.
  • ஊழியர்களின் ஊதியக்குழுவிற்கான உட்கூட்டமைப்புக் குழு: மத்திய செயற்குழுவில் ஊழியர்களின் ஊதியக்குழுவிற்கான உட்கூட்டமைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.                                                 ஊதிய உட்கூட்டமைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்கள்:         தோழர். இஸ்லாம் அகமது (அகில இந்திய தலைவர்),  C. சந்தேஷ்வர் சிங் (அகில இந்திய பொதுச் செயலர்), தோழர். C.K.மதிவாணன் (மாநில செயலர் - சென்னை), தோழர். R.G. டானி (மாநில செயலர் - மகாராஷ்டிரா), தோழர். K. நடராஜன் (மாநில செயலர் - தமிழ்நாடு), தோழர். K.S. சேஷாத்திரி (சம்மேளனச் செயலர் - கர்நாடகா) மற்றும் தோழர். மஹாபீர் சிங் (மாநில செயலர் - ஜார்கண்ட்)                                     -மேலும்... நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் இந்த குழு, கூட்டணி சங்கங்களை உள்ளடக்கி ஆலோசனைகளை பெறும்.
  • தபால் அட்டை இயக்கம்: நிதி ஆயோக் பரிந்துரையின் படி BSNL மற்றும்  ITI நிறுவனங்களை விற்கத் துடிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், தனி துணை டவர் நிறுவனம் உருவாக்கத்தை எதிர்த்தும் அனைத்து தொழிலாளர்களும் பாரத பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் இயக்கம் நடத்துவது.

No comments:

Post a Comment