Wednesday 11 January 2017

சேலம் மாவட்ட AITUC சார்பாக... நடைபெற்ற...
வங்கி முற்றுகைப் போராட்டம்...













































மத்திய அரசின் பணமதிப்பு நீக்க குளறுபடி திட்டத்தை
கண்டித்தும்..., 
60 நாட்கள் கடந்த பின்பும் அவலங்கள் கடக்காத
அவல
நிலையை கண்டித்தும்..., கட்டுப்பாடின்றி..., தட்டுப்பாடின்றி...
அனைவருக்கும் பணம் கிடைக்க உரிய நடவடிக்கை
எடுக்க வலியுறுத்தியும்...

AITUC-யின்..., மாநிலக்குழுவின்..., அறைகூவல்படி...
AITUC மற்றும் அதன் இணைப்புச் சங்கங்கள் 09-01-2017 திங்கட்கிழமை
அன்று சேலம்., கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை...
(SBI) முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்திற்கு... AITUC-யின் மாவட்ட தலைவர்
தோழர். K.A.வேணுகோபால் தலைமை ஏற்க..., மாவட்ட பொதுச் செயலர்
தோழர். M.முனுசாமி துவக்க உரை ஆற்றினார்.

முற்றுகை போராட்டத்தின்... கோரிக்கைகளை விளக்கி...
NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், சுகாதார தொழிலாளர்
சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர். C.ஜீவானந்தம், அமைப்பு 
சாரா தொழிலாளர் சங்கத்தின் செயலர் 
தோழர். A.விமலன்
&
சேலம் மாவட்ட விவசாயி சங்கத்தின் செயலர்
தோழர். 
A.S.சீனிவாசன், 
சாலையோர வியாபாரிகள்....
சங்கத்தின் செயலர் 
தோழர். V.ராஜேந்திரன்
&
ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் செயலர் தோழர். V.முருகன்
மற்றும் மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் இணைச்
செயலர் தோழர். V.ராஜேந்திரன் ஆகியோர்
கண்டன 
சிறப்புரை ஆற்றினர்.

கண்டன உரைக்கு பின்... வங்கியை முற்றுகை செய்த...
100-க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் கைது செய்யப்பட்டு மாலை
07-00 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் கலந்து 
கொண்ட தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

நமது NFTE -BSNL மாவட்ட சங்கத்தின் சார்பில்...
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், மாநில உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன், மாவட்ட உதவி செயலர் தோழர். P
.சுப்ரமணி,
மாவட்ட அமைப்பு செயலர் தோழர். S.R. செல்வராஜ், மாவட்ட அமைப்பு செயலர் தோழர். R. மணி,
மாவட்ட 
துணைத் தலைவர் தோழர்.
S.கண்ணையன்
உள்ளிட்ட 
25-க்கும் மேற்பட்ட 
தோழர்கள்
பங்கேற்று 
சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment