Sunday 8 January 2017

AIBEA-வின் அகில இந்திய மாநாடு... வெல்லட்டும்...


AIBEA சங்கத்தின்..., 28-வது அகில இந்திய மாநாடு...,
சென்னையில் 08-01-2017 முதல் 11-01-2017 
வரை... நடைபெற உள்ளது.

AIBEA-வின் வரலாற்று துளிகளில்... சில...:
  • சுதந்திர இந்தியாவிற்கு முன்பாகவே... 1946 ஏப்ரல் 20 அன்று துவங்கப்பட்ட சங்கம்.
  • வங்கி துறையில் உள்ள சங்கங்களில் மிகவும் பழமையானதும், பெரும்பான்மையுடனும், வலிமையுடனும், உருக்கு போன்று ஒற்றுமையுடனும் செயல்படுகின்ற சங்கம்.
  • 5 லட்சத்திற்கு மேல் உறுப்பினர்களை கொண்ட சங்கம்.
  • இந்தியா, மாநிலம், மாவட்டம், நகரம் மற்றும் தாலுக்கா என அமைப்பு ரீதியாக செயல்படும் சங்கம்.
  • கடந்த 50 ஆண்டுகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் என்ற மாபெரும் சாதனையை 10 முறை இருதரப்பு ஒப்பந்தம் கண்ட சங்கம்.
  • 1969 மற்றும் 1980 வங்கிகளின் தேசியமயமாக்கல் இயக்கங்களில் அளப்பரிய பங்குப்பணியை ஆற்றிய பொறுப்பான சங்கம்.
  • இன்றும்... வங்கிகளிலுள்ள மக்கள் சேமிப்பு கொள்ளை போகாமல் காத்திட... வாராக்கடன்களை மீட்டிட... தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சங்கம்.
  • ஊழியர்களுக்கான சலுகைகளை பெறுவதோடு நின்று விடாமல் வங்கியின் செயல்பாடு, கடன் கொள்கை, மக்கள் பிரச்சனை பொதுத்துறை, விவசாயக்கடன் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வரும் சங்கம்.        
இப்படி... பல்வேறு வரலாற்றுச் சாதனைகளுக்கு... 
சொந்தமான... 
AIBEA-வின் அகில இந்திய மாநாடு சிறக்க... வெல்ல... 
NFTE சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment