Wednesday 26 October 2016

TMTCLU... ஒப்பந்த ஊழியர்களுக்கான...
நமது கோரிக்கையும்... வழிகாட்டுதல் உத்திரவும்...


நமது TMTCLU-வின் மாநில செயற்குழு 10-09-2016 அன்று
குடந்தையில் நடைபெற்றது. இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்தின் அடிப்படையில் NFTE மற்றும் TMTCLU ஆகிய இரு மாநில
சங்கங்களும் 20-09-2016 அன்று மாநில நிர்வாகத்தை சந்தித்து,
கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.

அதன் அடிப்படையில்...

20-10-2016 அன்று தலைமை பொது மேலாளர் உடன்
நடைபெற்ற பேச்சு வார்த்தையில்... NFTE மாநில செயலர் தோழர்.
K.நடராஜன், மாநில தலைவர் தோழர். P.காமராஜ் மாநில உதவி செயலர்
தோழர். G.S.முரளிதரன் மற்றும் TMTCLU மாநில செயலர் தோழர்.
R.செல்வம் ஆகியோர் பங்கேற்று விவாதித்தனர்.

விவாதப் பிரச்சனைகளில்... முக்கியமாக...
கேரள மாநில நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களை Skilled /
Semiskilled என வகைப்படுத்தி அவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது.
 அதே முறையை..., நமது தமிழ் மாநிலத்திலும் அமுல்படுத்திட 
மாநில நிர்வாகத்தை வலியுறுத்தப்பட்டது.

CGM அவர்கள்..., இப்பிரச்சனையை மத்திய நிர்வாகத்தின் 
ஒப்புதல் பெற்ற பின் அமுல்படுத்த ஆவணம் 
செய்வதாகக் கூறினார்.

மேலும்..., மற்ற பிரச்சனைகளின் தீர்விற்காக...
வழிகாட்டுதல் மற்றும் அமுலாக்க உத்திரவினை 25-10-2016
அன்று மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கடிதத்தின்... சாராம்சம்...:
  • இந்த வருடத்திற்கான போனஸ், நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஒப்பந்த உடன்பாட்டின் படி உடனடியாக வழங்க வேண்டும்.
  • மத்திய மற்றும் மாநில நிர்வாகத்தின் உத்திரவுகள் முறையாக நடைமுறை படுத்தப் படுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் NODAL அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும் NODAL அதிகாரியின் பெயர், பதவி மற்றும் தொலைபேசி ஆகிய விபரங்களை 15-11-2016 -க்குள் மாநில நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
  • 15-11-2016 -க்குள் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் அடையாள அட்டை ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்படவேண்டும்.
  • 30-11-2016 -க்குள்  அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் ESI மருத்துவ அட்டை வழங்கப்படவேண்டும்.
  • ஒப்பந்த ஊழியர்களது EPF முறையாக கட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • மேற்கண்ட அனைத்து விபரங்களையும் 30-11-2016 -க்குள் மாநில நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment