Tuesday 25 October 2016

கோரிக்கைகளில்... ஏற்பும்... மறுப்பும்...


13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி...,
நமது NFTE தலைமையிலான NFBW கூட்டமைப்பு நாடு தழுவிய
ஆர்ப்பாட்டமும்.., தர்ணாவும் நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில்...,
நமது கோரிக்கைகள் மீதான, நிலைபாட்டை BSNL நிர்வாகம்
தனது 21-10-2016 தேதியிட்டக் கடிதத்தில் நமது மத்திய
சங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

ஏற்கப்பட்டவை:
  • போனஸ் 2014 - 2015 ஆம் ஆண்டுக்கு உத்திரவு வெளியிடப்பட்டு விட்டது. 2015 - 2016 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.
  • 3-வது ஊதிய மாற்றக்குழு அமைப்பது பற்றி DPE மற்றும் DOT-யின் வழிகாட்டுதல்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • TM பயிற்சி முடித்து காத்திருப்போருக்கான பதவி உயர்வுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. செங்கல்பட்டுப் பிரச்சனை சங்கங்களுடன் கலந்து ஆலோசித்த பின் முடிவெடுக்கப்படும். 
  • விடுப்பைக் காசாக்கும் (LEAVE ENCASHMENT) வசதி DOT ஊழியர்கள் போலவே BSNL-லில் நியமனம் பெற்ற ஊழியர்களுக்கும் பொருந்தும்.
  • BSNL நியமன ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் DOT-யின் ஒப்புதல் பெற்று அமுல் படுத்தப்படும்.
  • BSNL MRS மருத்துவத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட குழு நவம்பரில் கூடுகிறது. அதன் பின்  உரிய திருத்தங்கள் செய்யப்படும்.

மறுக்கப்பட்டவை:
  • 4-வது சனிக்கிழமை விடுமுறை என்பது ஏற்புடையதல்ல. வங்கி சேவைக்கும் தொலைத்தொடர்பு சேவைக்கும் மிக வித்தியாசம் உள்ளது.
  • NEPP பதவி உயர்வில் SC / ST ஊழியர்களுக்கு இட ஒதுக்கீடு, தேர்வெழுதிப் பெற்ற பதவி உயர்வைக் கணக்கில் கொள்ளாமல் இருப்பது..., குறைவான ஊதிய நிலையில் பதவி உயர்வு அளிப்பது போன்றவற்றை பல முறை பேசி விட்டதால் புதிதாகப் பரிசீலிக்க இயலாது.
  • தேக்கநிலை ஊதியம் பற்றி 3-வது ஊதியக்குழு முடிவெடுக்கும் .
  • வணிகப்பகுதி உருவாக்கம் ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. எனவே சங்கங்களுடன் பேசுவதற்கு அவசியமில்லை.
  • நன்னடத்தை விதி 55 ii (b) பற்றி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது.

இது... நிர்வாகத்தின்... நிலைபாடே தவிர... முடிவல்ல...,
கோரிக்கைகளில்... முன்னேற்றம்... 
பெறும்வரை..., 
நமது போராட்டம்... தொடரும்...

No comments:

Post a Comment