Wednesday 21 September 2016

TMTCLU... ஒப்பந்த ஊழியர்களுக்கான... 
கோரிக்கை விளக்கக் கூட்டம்...



நமது ஒப்பந்த ஊழியர்களின் 8 அம்ச கோரிக்கைகளை...
வலியுறுத்தி..., 22-09-2016 அன்று மாவட்ட தலை நகரங்களில் நடைபெற
இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 20-09-2016 அன்று
மாநில துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) அவர்களுடன் 
நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட... சில...
முன்னேற்றத்தின் அடிப்படையிலும்...,

மேலும்..., 30-09-2016 அன்று முதன்மை பொது மேலாளர் முன்னிலையில்
விவாதித்து... தீர்வு... கண்டிட..., தமிழ் மாநில நிர்வாகம் 
நமது NFTE மற்றும் TMTCLU மாநில சங்கங்களிடம் உத்திரவாதம்
அளித்ததின் அடிப்படையிலும்...,

TMTCLU-வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டு...,
அதற்கு மாற்றாக கோரிக்கை விளக்க கூட்டம் நடத்திட
NFTE மற்றும் TMTCLU மாநில சங்கங்கள்...,
வேண்டு கோள் விடுத்துள்ளது.

அதன் அடிப்படையில்... நமது சேலம் மாவட்டத்தில்...

22-09-2016 வியாழக்கிழமை அன்று மாலை 05-00 மணிக்கு...,
நமது NFTE - BSNL மாவட்ட சங்க அலுவலகத்தில்...,
TMTCLU-வின் கோரிக்கை விளக்க கூட்டம்
நடைபெறும்.

கோரிக்கைகளை... நடைமுறைப் படுத்திட...
திரளாக... பங்கேற்போம்...

No comments:

Post a Comment