Monday 12 September 2016

BSNL நிறுவனத்தின்... நிதி நிலை அறிக்கை...

Image result for financial report for bsnl

நமது BSNL நிறுவனத்தின் 2015 - 2016 ஆம் ஆண்டிற்காண 
தணிக்கை செய்யப்பட்ட இருப்பு மற்றும் நிதி நிலை அறிக்கைக்கு 
BSNL குழு 09-09-2016 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி நிலை அறிக்கையின்... சிறப்பு அம்சங்கள் :
  • 2009 - 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக வருமானமாக ரூபாய். 32,918/-  கோடியை இந்த (2015 - 2016) நிதியாண்டில் ஈட்டியுள்ளோம்.
  • கடந்த ஆண்டு (2014 - 2015) நமது நிறுவனத்தின் வருமானம் ரூபாய். 28,648/- கோடி. 
  • கடந்த 2014 - 2015 ஆம் ஆண்டோடு... இந்த 2015 - 2016 ஆம் ஆண்டு ஓர் ஒப்பீடு:
  • கடந்த ஆண்டை (2014 - 2015) விட, இந்த ஆண்டு (2015 - 2016) ரூபாய். 4270/- கோடி கூடுதலாக வருமானம் ஈட்டியுள்ளோம்.
  • செயல்பாட்டின் மூலமாக 4.43% சதவீதம் வருமானம் உயர்ந்துள்ளது. 2014 - 2015 ஆம் ஆண்டு செயல்பாட்டு வருமானம் ரூபாய். 27,242/- கோடி, 2015 - 2016 ஆம் ஆண்டு செயல்பாட்டு வருமானம் ரூபாய். 28,449/- கோடி. 2014 - 2015 ஆம் ஆண்டை விட ரூபாய். 1207/- கோடி கூடுதலாக செயல்பாட்டு வருமானம் பெற்றுள்ளோம்.
  • நிறுவனத்தின் நிகர நட்டம் 2014 - 2015 ஆம் ஆண்டை விட 53% சதவீதம் குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு (2014 - 2015) நட்டம் ரூபாய். 8234/- கோடியிலிருந்து இந்த ஆண்டு (2015 - 2016) நட்டம் ரூபாய். 3880/- கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
  • செயல்பாட்டு லாபம் 2014 - 2015 ஆம் ஆண்டு ரூபாய். 672/- கோடியிலிருந்து இந்த ஆண்டு (2015 - 2016) ரூபாய். 3854/- கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட (2014 - 2015)..., இந்த ஆண்டு (2015 - 2016) ரூபாய். 3182/- கோடி கூடுதலாக செயல்பாட்டு லாபம் பெற்றுள்ளோம்.
  • 2500/- கோடி ரூபாய் கடனை தவிர..., மற்ற அனைத்து கடன்களும் திருப்பி செலுத்தப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment