Tuesday 20 September 2016

மீண்டும் போனஸ்... மீட்டுத் தந்தது NFTE...


நமது NFTE சங்கத்தின் தொடர் முயற்சி காரணமாக...,
அனைத்து BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 2014 - 2015 ஆம்
ஆண்டிற்கான போனஸ் ரூபாய். 3000/- வழங்க ஒப்புதல்
அளித்துள்ளதாக நமது CMD..., போனஸ் குழுத் 
தலைவர்களிடம் 19-09-2016 அன்று
தெரிவித்துள்ளார்.

இக்கோப்பு... நிர்வாகக்குழு மற்றும் வாரிய ஒப்புதலுக்குப் பின்,
போனஸ் உத்திரவாக வெளியிடப்படும்.

2015 - 2016 ஆம் ஆண்டிற்கான போனஸ் தொகை குறித்து, 
செப்டம்பர் 30-க்கு பிறகு பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.
2014 - 2015 மற்றும் 2015 - 2016 ஆகிய இரண்டு ஆண்டிற்கான
போனஸ் தொகையும்..., தீபாவளி திருநாளுக்கு... 
முன்பாக பட்டு வாடா செய்யப்படும்.

நமது NFTE சங்கத்தின்... இந்த வரலாற்று சாதனையால்...,
லாபம் வந்தால் மட்டுமே போனஸ் என்று BSNLEU நிர்வாகத்துடன்
போட்ட உடன்பாடு உடைக்கப் பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளாக இழந்த போனஸ்... மீட்டெடுக்கப் பட்டுள்ளது...
இரண்டு இலக்க போனஸை NFTE ஏற்றுக் கொண்டது..., 
என்ற தேர்தல் கால பொய் பிரச்சாரம் 
முறியடிக்கப் பட்டுள்ளது.

போனஸ்... எப்படி கிடைக்கும்... NFTE கேட்டால் கிடைத்து விடுமா... 
இனி போனஸ், இல்லவே இல்லை... கிடைக்கவே கிடைக்காது...
சம்பளம் வருவதே பெரிது என்ற BSNLEU-வின்
ஆரூடம் பொய்த்து போனது.

நம்பிக்கை... அது தானே எல்லாம்..., என்பது போல...
நமது நிறுவனத்தில் தொழிற் சங்கம் என்றால்... 
தொழிற் சங்க நம்பிக்கை என்றால்... அது தானே NFTE 
என்ற நம்பிக்கை நிரூபிக்கப் பட்டுள்ளது.

போனஸ் தொகை குறைவு என்றாலும்..., 
போனஸ் நமது பிறப்புரிமை... அதை மீண்டும் பெற்று விட்டோம் 
மீட்டு தந்தது நமது NFTE என்ற மகிழ்ச்சியில்...,
போனஸ் தொகையில் உச்சம் பெற்றிட...
NFTE-யின் மரபு மாறா பாதையில் பயணிப்போம்.

No comments:

Post a Comment