Monday, 22 August 2016

செப்டம்பர் 2 - 2016
அகில இந்திய பொது வேலை நிறுத்தம்


செப்டம்பர் 2 - 2016...
வேலை நிறுத்தம்... ஓர் தர்ம யுத்தம்...
இந்த தேசத்தின் சக்கரங்களை...
ஒரு நாள் நிறுத்தி வைக்கிற இயக்கம்...
ஓய்வுக்காக அல்ல... ஒழுங்கு படுத்துவதற்காக...
சீரான சுழற்சிக்காக... அது... பயணப்படுகிற...
பாதையை... செப்பனிடுவதற்காக...
உழைப்பாளி மக்களின் நலனை...
நோக்கி அதை திருப்புவதற்காக...

20 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கும்...,
நம் தேசம் காக்கும்... BSNL நிறுவனம் காக்கும்...
இந்த புனிதப் போரில்...
நாம் அனைவரும் பங்கேற்போம்...

Wednesday, 17 August 2016

NFBW கூட்டமைப்பு சார்பாக...
நமது சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற...
பெருந்திரள் தர்ணா போராட்டம்...


போனஸ் வழங்குதல்... ஊதியக்குழு உருவாக்குதல்... மற்றும்
BSNL உள்ளிட்ட பொதுத்துறைகளை விற்கத்துடிக்கும் நிதி ஆயோக்கின்
மோசமான பரிந்துரையை கண்டித்து 12-08-2016 வெள்ளிக்கிழமை
அன்று காலை 10.00 மணிக்கு சேலம் பொது மேலாளர்
அலுவலகம் முன்பாக மாபெரும் பெருந்திரள்
தர்ணா போராட்டம் மிகச் சிறப்பாக
நடைபெற்றது.

இந்த தர்ணா போராட்டத்திற்கு... NFTE மாவட்ட தலைவர்... 
தோழர். S.சின்னசாமி, TEPU மாவட்ட தலைவர் தோழர். P.அன்பழகன்,
SEWA-BSNL மாவட்ட தலைவர் தோழர். R.மாதையன்
ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.

மிக எழுச்சியாக துவங்கிய... தர்ணா போராட்டத்தை...
NFTE மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன் துவக்கி
வைத்து..., சிறப்புரை ஆற்றினார்.

கோரிக்கைகளை விளக்கி... 
NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், TEPU மாவட்ட செயலர்
தோழர். P.கிருஷ்ணமூர்த்தி, SEWA-BSNL மாவட்ட செயலர்
தோழர். G.மணிவண்ணன், NFTE மாநில சிறப்பு அழைப்பாளர்
தோழர். P.கஜேந்திரன் மற்றும் SEWA-BSNL மாநில துணைத் தலைவர்
தோழர். S.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன
சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக... NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி 
கூறி... தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த தர்ணா போராட்டத்தில் 250-க்கும் (25 பெண்கள் உள்பட)  
மேற்பட்ட தோழர், தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு 
சிறப்பித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 
இருந்து தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து 
தோழர், தோழியர்களுக்கும் சேலம் மாவட்ட NFBW 
கூட்டமைப்பின் சார்பாக நன்றியை 
தெரிவித்துக் கொள்கிறோம்.


Wednesday, 10 August 2016

NFTE-ன் தொடர் போராட்டம் வெற்றி...!    
78.2 சத IDA அடிப்படையில்... வீட்டு வாடகைப்படி...


78.2 சத வீத IDA சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி
HRA வழங்க வேண்டும்...,  என நமது NFTE மத்திய சங்கம் 
தொடர்ந்து BSNL நிர்வாகத்தை வலியுறுத்தியத்தின் விளைவாக,
இக்கோரிக்கை தேசியக்குழுவில் ஏற்கப்பட்டது.

தேசியக்குழுவில் ஏற்றுக் கொண்ட போதிலும்...,
நிர்வாகம் தொடர்ந்து இப்பிரச்சனையை 
இழுத்தடித்து வந்தது.

இந்நிலையில்... 78.2 சத வீத அடிப்படையில் வீட்டு வாடகைப்படி
வழங்க வலியுறுத்தி..., நமது NFBW கூட்டமைப்பு சார்பாக...
12-08-2016 அன்று தர்ணா போராட்ட...
அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

 தான் வைத்த கோரிக்கைகளை தானும் மறந்து...,
நம்மையும் மறக்க செய்யக்கூடிய... ஒரு... சில...No.1, சங்கங்களுக்கிடையே
எந்நிலையிலும்... வைத்த கோரிக்கைகளுக்காக... 
தொடர்ந்து போராடுவது..., போராடியதின் விளைவாக...
களம் காண்பதற்கு... முன்பாகவே...
போராடுவதற்கு (12-08-2016) முன்பாகவே...
வென்று... நிற்கின்றோம்...

வென்றதின் விளைவாக... நின்றதின் விளைவாக...
தொடர்... முயற்சியின்... பலனாக... 
நமது BSNL நிர்வாகம் 10-08-2016 இன்று 78.2 சத வீத அடிப்படையில்
வீட்டு வாடகைப்படி வழங்குவதற்கான
ஒப்புதலை வழங்கியுள்ளது.

BSNL உருவாக்க தினமான 01-10-2016 முதல்
இது அமுல் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

தவிக்க விட்டது யார்...? தாமதம் செய்தது யார்...?
தடுத்தது யார்...? கெடுத்தது யார்...?
என்ற... பல்வேறு... கேள்விகளுக்கு... அப்பால்...
தொடர்ந்து போராடி... 78.2-ல் HRA பெற்று தந்த...
நமது NFTE மத்திய..., மாநில சங்கத்திற்கு...,
நமது நன்றி பாராட்டுக்கள்.
2016 ஆகஸ்ட் 12
பெருந்திரள் தர்ணா - சுற்றறிக்கை


கோரிக்கைகளை நடைமுறை படுத்திட...
திரள்வீர்... தோழர்களே...

தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBW.,
சேலம் - SSA.

Tuesday, 9 August 2016

2016 ஆகஸ்ட் 12
நாடு தழுவிய தர்ணா போராட்டம்


 நமது NATIONAL FORUM OF BSNL WORKERS
(தேசிய தொலைத்தொடர்பு தொழிலாளர் கூட்டமைப்பு) சார்பாக...
கீழ்க்கண்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...
12-08-2016 வெள்ளிக்கிழமை அன்று...
நாடு தழுவிய... மத்திய, மாநில, மாவட்ட தலை நகரங்களில்...
சக்திமிக்க... தர்ணா போராட்டம் நடத்திட...
நமது மத்திய, மாநில NFBW கூட்டமைப்பு... 
அறைகூவல் கொடுத்துள்ளது.

கோரிக்கைகள்: 
  • PLI போனஸ் திட்டம் உடனடியாக இறுதி செய்யப்பட வேண்டும். 2014-2015 மற்றும் 2015-2016 ஆண்டுக்கான போனஸ் உடனடியாக வழங்க வேண்டும்.
  • தேசியக் குழு கூட்டத்தில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டபடி HRA-க்கு 78.2% IDA தரப்பட வேண்டும்.
  • 01-01-2017 முதல் ஊதிய மாற்றம் பெற DPE உடனடியாக வழிகாட்டுதல் வழங்க வேண்டும் மேலும்..., BSNL நிர்வாகம் உடனடியாக இருதரப்பு பேச்சுவார்த்தை குழு அமைத்திட வேண்டும்.
  • BSNL மற்றும் MTNL நிறுவனத்தை பங்கு விற்பனை மூலம் தனியார் நிறுவனத்திற்கு (Strategic Sale) கேந்திர விற்பனை செய்திட, நிதி ஆயோக் செய்த பரிந்துரையை நிராகரிக்கப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில்... நமது சேலம் மாவட்டத்தில்...

12-08-2016 - வெள்ளிக்கிழமை - காலை 10 மணி முதல் 2 மணி வரை
பொது மேலாளர் அலுவலகம்., சேலம்-7 முன்பாக...
சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பு சார்பாக...
மாபெரும்... தர்ணா போராட்டம்... நடைபெறும்.

கோரிக்கைகளை நடைமுறை படுத்திட...
திரள்வீர்... தோழர்களே...

தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBW.,
சேலம் - SSA.